News January 24, 2025
அரியலூர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

வாக்காளர் தினம் கொண்டாடவுள்ள நிலையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளன. இதன் கீழ் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் நாளை தொடங்கி வைக்க உள்ளார். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் சுய உதவி குழு பெண்கள் கலந்து கொள்கின்றனர்.
Similar News
News January 10, 2026
அரியலூர்: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

அரியலூர் மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News January 10, 2026
கங்கைகொண்ட சோழபுரத்தில் பொங்கல் கலை விழா

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வர் ஆலய வளாகத்தில் இம்மாதம் 15 மற்றும் 16-ம் தேதி இரண்டு நாட்கள் மாலை ஐந்து மணி முதல் 8 மணி வரை பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதன்படி கரகாட்டம், நையாண்டி மேளம், குதிரை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News January 10, 2026
அரியலூர்: வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு

அரியலூர் மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <


