News August 8, 2024
அரியலூர் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு

அரியலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை மற்றும் ரயில்வே சார்பில் அரியலூர் ரயில் நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகா தாய்பாலின் முக்கியத்துவம், தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் வகீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 5, 2025
அரியலூர்: ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநர் ரவி, தமிழர்கள் குறித்து கூறிய கருத்தை கண்டித்து அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அண்ணாசிலை அருகே நடந்த போராட்டத்துக்கு விடுதலை நீலமேகன் தலைமை வகித்தார். சுபா.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். இந்நிகழ்வி திமுக, மதிமுக, விசிக, காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆளுநரின் பேச்சைத் தீவிரமாக எதிர்த்தனர்.
News December 5, 2025
அரியலூர்: கர்நாடக MLA தமிழக அமைச்சரை சந்திப்பு

அரியலூர், பெரம்பலூர்-கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கர்நாடக மாநில மின்சார வாரிய தலைவரும், உஸ்கோட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் பச்சேகௌடாவை, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அரியலூர் சுற்றுலா மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
News December 5, 2025
அரியலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு…

அரியலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <


