News April 9, 2025

அரியலூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர், மீன்சுருட்டி, தா பழூர் உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர உதவிக்கு போலீசாரின் கைபேசி எண் மாவட்ட காவல் அலுவலகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள்

Similar News

News December 2, 2025

அரியலூர்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

image

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 2, 2025

அரியலூர்: மழையின் காரணமாக 63 வீடுகள் சேதம்

image

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் 32 குடிசை வீடுகள் பகுதி அளவும், 31 காரை வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாகவும், அதன்படி மொத்தமாக 63 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று தகவல் தரப்பட்டுள்ளது. மேலும் திருமானூரில் மட்டும் நேற்று 3.2 மி.மீ மழைப்பதிவாகி உள்ளது.

News December 2, 2025

அரியலூர்: காணாமல் போன சிறுமிகள் ஒப்படைப்பு

image

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதியை சேர்ந்த சிறுமிகள் இரண்டு பேர் வீட்டில் சண்டையிட்டு வெளியில் சென்றுள்ளனர். இதனையடுத்து பெற்றோர்கள் தளவாய் காவல் நிலையத்தில், புகார் அளித்ததின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அரியலூர் எஸ்.பி விஷ்வேஸ் பா.சாஸ்திரி உத்தரவின்பேரில், கடந்த 30ஆம் தேதி சிறுமிகளை தேடும் பணியில் ஈடுபட்டு, சிறுமிகளை பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!