News August 15, 2024
அரியலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

அரியலூர் ஆண்டிமடம் ஒன்றியம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு. வீ.அருமைராஜ், அனைத்து திட்டக் கூறுகளிலும் மிகச்சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி அவர்கள் பாராட்டு சான்று வழங்கினார்.
Similar News
News December 9, 2025
அரியலூர்: 41 பேர் மீது வழக்கு பதிவு!

அரியலூர் மாவட்டத்தில், கடந்த வாரத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர்கள் மீது 8 வழக்குகளும், பொது இடங்களில் மது அருந்திய குற்றத்திற்காக 41 வழக்குகளும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 14 பேர் மீது வழக்குபதிவு. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததற்காக 7 வழக்குகளும் பதிவு என எஸ்பி அலுவலகம் தெரிவித்தது.
News December 9, 2025
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள TNUSRB SI தேர்விற்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்கான இலவச மாதிரி தேர்வு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டல் மையத்தில், இம்மாதம் 12 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது, என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.08) இரவு 10 மணி முதல் இன்று (டிச.09) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


