News August 16, 2024

அரியலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

image

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நுழைவு வாயில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழகம் முழுவதும் மருத்துவர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 15, 2025

அரியலூர்: தீராத நோய் தீர்க்கும் வைத்தியநாதர்

image

அரியலூர் மாவட்டம், திருமழபாடி எனும் ஊரில் வைத்தியநாதர் கோவில் அமைந்துள்ளது. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, மூலவர் வைத்தியநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்று கூறப்படுகிறது. வாழ்வில் நோயின்றி வாழ்வதற்கு இந்த கோவிலுக்கு செல்லுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும்.

News September 15, 2025

அரியலூர் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநருமான மு.விஜயலெட்சுமி தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நடைபெற்றது.

News September 15, 2025

அரியலூர்: 354 மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 354 மனுக்களை பொது மக்களிடம் இருந்து பெற்ற மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

error: Content is protected !!