News September 12, 2024
அரியலூர்-போட்டித் தேர்வை கண்காணிக்க குழுக்கள்

அரியலூர் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 2,2ஏ முதல் நிலை தேர்வுகள் நடைபெறுகிறது. இத்தேர்வினை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 2 பறக்கும் படை, 08 இயங்கு குழுக்கள் 29 ஆய்வு அலுவலர்கள், 29 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
அரியலூர்: வாட்ஸ் அப் வழியாக புக்கிங்!

அரியலூர் மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News December 10, 2025
அரியலூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு?

அரியலூர் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. மேலும் <
News December 10, 2025
அரியலூர்: 69 பேர் மீது வழக்கு பதிவு

அரியலூர் மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் சாஸ்திரி உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் மது அருந்திய 41 பேர், மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டியதாக 14 பேர், சட்டவிரோதமாக மது விற்றதாக 7 பேர், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என அரியலூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.


