News August 24, 2024
அரியலூர் பயனாளிகளிடம் தொடர்பு கொண்ட ஆட்சியர்

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் அரசு நலத்திட்டத்தில் பயனடைந்து வரும் பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேரடியாக தொலைபேசி வாயிலாக திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்தார். கலைஞர் உரிமைத்தொகை பல்வேறு திட்டங்களில் உதவித்தொகை கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி மூலம் பேசி திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.
Similar News
News November 15, 2025
அரியலூர் நூறாவதாக பிரசவித்த தாய்க்கு நினைவு பரிசு

அரியலூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஆண்டு மார்ச் 25 அன்று முதல் செயல்பட தொடங்கியது. இங்கு நடைபெற்ற பிரசவங்கள் அனைத்தும் சுகப்பிரசவமாக நடைபெற்றுள்ளது. மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நூறாவதாக பிரசவித்த தாய் மற்றும் சேய்க்கு நினைவு பரிசை மாவட்ட சுகாதார அலுவலர் மணிவண்ணன் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கார்த்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News November 15, 2025
அரியலூர்: டிகிரி போதும்..பேங்க் வேலை!

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள் <
News November 15, 2025
அரியலூர் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப்போட்டி

அரியலூர் மாவட்டத்தில் டிசம்பர் 03, உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஓவியப் போட்டிகள் மாற்றுத்திறன் அடிப்படையில் 4 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகள் வரும் 21ம் தேதி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும், என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


