News April 25, 2025

அரியலூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு<<>> செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

Similar News

News November 22, 2025

அரியலூர்: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

வெங்கனூரை சேர்ந்வர் கவியரசன்(23). இவர் மீது வெங்கனூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 26ம் தேதி வெங்கனூர் காவல் நிலையம் முன்பு, போலீசாரை தாக்கி கத்தியால் கொலை செய்ய முயன்றுள்ளார். அவர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைந்த நிலையில், போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரை பேரில் கலெக்டர் ரத்தினசாமி குண்டர் தடுப்பு சட்டத்தில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

News November 22, 2025

அரியலூர்: பைக்கில் சாகசம் – 2 இளைஞர்கள் கைது

image

அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஆனந்தவாடி பிரிவு சாலையில் பொதுமக்கள் செல்லும் பாதையில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஒட்டி சாகசத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இவர்கள் மீது இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, 2 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

News November 22, 2025

அரியலூர் : தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (நவ21) தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உறுப்பினர்கள் 15 நபர்களுக்கு, கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் மற்றும் 14 நபர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!