News March 22, 2025
அரியலூர் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை

அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கில், 2020 ஆம் ஆண்டு குடும்பத் தகராறில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மற்றொரு வழக்கில், கடன் விவகாரத்தில் ஏற்பட்ட கொலை சம்பவத்தில் 4 பேருக்கு தண்டனை பெற்றனர். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தீர்ப்பை வரவேற்றனர்.
Similar News
News April 10, 2025
அரியலூர்: குழந்தை வரம் அருளும் திரௌபதி அம்மன்

அரியலூர் மாவட்டம், அகரம் என்னும் ஊரில் திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது. இங்கு சென்று மூலவர் திரௌபதி அம்மனை வழிபட்டால். நீண்ட நாள் பிள்ளைபேறு வேண்டுவோரின் வேண்டுதல் நிறைவேறி குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
News April 10, 2025
அரியலூர்: சமையல் உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 178 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தகவல் பலகையில் ஒட்டப்பட்டும். விண்ணப்பிக்க உரிய ஆவனங்களுடன் 29.04.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News April 10, 2025
பெண் எஸ்.எஸ்.ஐ-க்கு வாக்கி-டாக்கியில் பறந்த உத்தரவு

அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக பணியாற்றிய சுமதி, கற்பழிப்பு தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசி, புகாரை ஏற்க மறுத்துள்ளார். இந்த விவகாரம் டி.ஐ.ஜி. வருண்குமார் கவனத்திற்கு சென்றதால், அவர் வாக்கி-டாக்கி மூலம் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி, வாக்கி-டாக்கியிலேயே எஸ்.எஸ்.ஐ சுமதி-யை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.