News September 24, 2024
அரியலூர்-நிலம் வாங்க குறைந்த வட்டியில் கடன்

அரியலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் வழங்குகிறது. எனவே தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News May 7, 2025
இனி APPல அரசு அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம்

அரியலூர் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக் செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்கலாம். செல்போனில் TN CM HELPLINE என்ற APP-யை பதிவிறக்கம் செய்து புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள்.உங்கள் பகுதியினருக்கும் Share செய்து பயனடையுங்கள்.
News May 7, 2025
அரியலூர்: 10th பாஸ் போதும்.. அரசு வேலை ரெடி

மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10 th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு www.cbic.gov.in என்ற இணையத்தை பார்க்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE செய்யவும்!
News May 7, 2025
அரியலூர்: உணவு குறித்து புகார் அளிக்க புது செயலி

உணவகம், பேக்கரிகளில் உள்ள தரமற்ற உணவு குறித்து மக்கள் புகார் அளிக்க ‘TN FOOD SAFETY CONSUMER’ எனும் செயலியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக கலப்படம், தரமற்ற உணவு குறித்து டைப் ஏதும் செய்யமால் மிக எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்!