News April 12, 2025

அரியலூர்: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

Similar News

News December 20, 2025

அரியலூர்: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

image

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 24,368 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் SIR பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்களது வாக்காளர் அட்டை எண்ணை பதிவிட்டு எளிதாக தெரிந்து கொள்ளலாம். SHARE NOW!

News December 20, 2025

அரியலூர் ஆட்சியரிடம், எம்எல்ஏ கடிதம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமியை நேற்று (டிச.19) ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் சந்தித்தார். அப்போது, ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற வேண்டிய பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும், பொதுமக்களிடம் பெற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றிட வேண்டியும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை கடிதம் ஒன்றை ஆட்சியரிடம் வழங்கினார்.

News December 20, 2025

அரியலூர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

image

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அரியலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு மையத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு சோதனை நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியை பார்வையிட்டனர். மேலும், அங்கிருந்த அரசு அதிகாரிகளிடம் தங்களது சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தனர்.

error: Content is protected !!