News May 17, 2024
அரியலூர்: ஜூன் 7ஆம் தேதி கடைசி நாள்

அரியலூர் மற்றும் ஆண்டிமடம் அரசு ஐடிஐ -யில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு இணையதளம் மற்றும் ஐடிஐ அலுவலக மையங்கள் மூலம் மாணவர்கள் ஜீன் 07-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன்படி அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர www.skilltraining.tn gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2025
அரியலூர்: சங்க காலத்தில் இருந்த இராணுவ முகாம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமழப்பாடயின் வரலாறு, சங்க காலத்திலிருந்து தொடங்குகிறது. இவ்விடம் சங்க கால மழவர் பரம்பரையினரின் இராணுவ முகாமாக இருந்ததால், மழவர்பாடி என்று அழைக்கப்பட்டு பின்னர் திருமழப்பாடி என்றானது. இந்த இடத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி என்று அழைக்கப்படும் சிவன் கோவிலானது தேவார நாயன்மார்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர்களால் வழிபாடு செய்யப்பட்டு, பாடல் பெற்ற இடமாகும்.
News November 20, 2025
அரியலூர்: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

அரியலூர் மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News November 20, 2025
அரியலூர் மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க..!

அரியலூர் மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. வழக்கு நிலை உடனே உங்க Phone-க்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!


