News March 19, 2024
அரியலூர்: சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது

அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய 2 சிறுவர்கள் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக பள்ளி முடிந்து திரும்பிய 16 வயது மாணவியை காதலிப்பதாக கூறி, சிறுவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அச்சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 18 வயதுடைய சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், மற்றொரு 18 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.
Similar News
News August 11, 2025
அரியலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை

அரியலூர் மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 7 உதவியாளர்கள் மற்றும் 21 எழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள் என மொத்தம் 28 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் <
News August 11, 2025
அரியலூர்: 617 மது பாட்டில்கள் பறிமுதல்-வாலிபர் கைது!

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த உடையார்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த மணிவண்ணன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 617 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News August 11, 2025
அரியலூர் மாவட்டம் ரோந்து பணி செல்லும் காவலர் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 10) அரியலூர் பகுதியில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண், SSI சிவராஜ்-9498165521. அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது 100ஐ அழைக்கவும். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!