News April 10, 2025
அரியலூர்: குழந்தை வரம் அருளும் திரௌபதி அம்மன்

அரியலூர் மாவட்டம், அகரம் என்னும் ஊரில் திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது. இங்கு சென்று மூலவர் திரௌபதி அம்மனை வழிபட்டால். நீண்ட நாள் பிள்ளைபேறு வேண்டுவோரின் வேண்டுதல் நிறைவேறி குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Similar News
News December 14, 2025
மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சென்னை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சியர் ஒப்புதலின்படி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வரும் 16-ம் தேதி ஆண்டிமடம் தனியார் பள்ளியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று முகாம் குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
News December 14, 2025
அரியலூர்: ரூ.96,210 சம்பளம்..வங்கியில் வேலை!

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-32 (SC/ST- வயது வரம்பு கிடையாது)
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 31.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 14, 2025
அரியலூர் ஆட்சியர் அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில், டிசம்பர் 17-26 வரை 7 நாட்கள் ஆட்சிமொழிச் சட்ட வாரம் காலை 10-12.30மணி வரை கொண்டாடப்பட உள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வாரத்தின் இறுதி நாளான டிச.26 அன்று பொதுமக்கள் ஆட்சிமொழிச் சட்டத்தை அறியும் வகையில் விளம்பர பதாகைகள் ஏந்தி அரசுப் பணியாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


