News October 23, 2024

அரியலூர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட எஸ்பி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.மனு கொடுக்க வந்த 14 மனுதாரர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எஸ்பி உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News December 6, 2025

அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருது பெற சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை டிச-18 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 6, 2025

அரியலூர் எஸ்பி தலைமையில் முக்கிய ஆலோசனை

image

அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் டிச.5 ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்பி விஸ்வேஷ் பா சாஸ்திரி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் போக்சோ வழக்குகள், எஸ்சி எஸ்டி வழக்குகள், மேலும் நிலுவையில் உள்ள கொடுங்குற்ற வழக்குகளை விரைவாக முடிப்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

News December 6, 2025

அரியலூர் மாவட்டத்தில் மின்தடை

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், தேளூர், உடையார்பாளையம் மற்றும் செந்துறை துணைமின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரியலூர் நகரம், கடுகூர், பொய்யாதநல்லூர், வி.கைகாட்டி, உடையார்பாளையம், இரும்பிலிகுறிச்சி, மனகெதி ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (டிச.06) மாதாந்திர பராமரிப்பு பணி முடியும் வரை மின்தடை என துணை செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

error: Content is protected !!