News September 13, 2024
அரியலூர்- கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

அரியலூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கறவை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படுத்தும், புரூசெல்லோசிஸ் நோய்க்கான 4-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே 8 மாதம் வயதுடைய கன்றுகளுக்கு புரூசெல்லோசிஸ் நோய்க்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
அரியலூர்: முதியோர் இல்லங்களில் ஆட்சியர் ஆய்வு

அரியலூர் ராஜாஜி நகர் மற்றும் கொல்லாபுரத்தில் உள்ள முதியோர் இல்லங்களை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், முதியோர்கள் பொழுது போக்குவதற்கான வசதிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்த ஆட்சியர், முதியோர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
News November 8, 2025
அரியலூர்: 12th போதும்.. வங்கி வேலை!

அரியலூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 8, 2025
அரியலூரில் மாரத்தான் போட்டி

அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியை எம்எல்ஏ-க்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் வயதின் அடிப்படையில் 17 முதல் 25 மற்றும் 25 க்கும் மேற்பட்ட என நான்கு பிரிவுகளில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


