News April 28, 2025
அரியலூர்: ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை ஒட்டி மே 1ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், சுய உதவி குழு பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
அரியலூர்: ஒரே ஆண்டில் இவ்வளவு வழக்கா?

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தை திருமணத்தால் சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 2025-ம் ஆண்டு மட்டும் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ குறித்த 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.
News November 24, 2025
அரியலூர்: மாநில சிறுபான்மையினர் குழு ஆய்வு கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், இன்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலதுறையின் சார்பில், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தலைமையில், சிறுபான்மையினர் சிறப்புக்குழு ஆய்வுகூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி முன்னிலை நடைப்பெற்றது. இதில் மாநில சிறுபான்மையின ஆணைய தலைவரிடம் வழங்கபட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளபட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நிகழ்வு நடைபெற்றது.
News November 24, 2025
அரியலூர்: கொரியர் வாகனம் விபத்து

அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் அருகே எஸ்.டி கொரியரின், நான்கு சக்கர வாகனம், இன்று திடீரென விபத்து ஏற்பட்டு கவிழ்ந்தது. மேலும் இந்த விபத்து எப்படி நடைபெற்றது, என்ன காரணம் என்பது குறித்து கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலையிலேயே ஏற்பட்ட விபத்து சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


