News August 24, 2024
அரியலூர் ஆட்சியர் அழைப்பு

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதியும் மற்றும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 6ம் தேதியும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News December 17, 2025
அரியலூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <
News December 17, 2025
அரியலூர்: தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்பு

அரியலூர் மாவட்டம் சின்னமணக்குடி காட்டுப் பகுதியில், ஆண் மற்றும் பெண் சடலம் தூக்கில் தொங்கியவாறு இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், நுரையூர் கிராமத்தைச் சேர்ந்த தேவி மற்றும் தலையாரிகுடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பதும் தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 17, 2025
அரியலூர்: சிறப்பு கடன் வசதியாக்கல் முகாம்

அரியலூர் மாவட்டத்திலுள்ள மாவட்ட தொழில் மையம், வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள், அனைத்து வங்கிகளையும் இணைத்து, மாபெரும் கடன் வசதியாக்கல் முகாம் இன்று நடைபெற உள்ளது. அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இந்த முகாம் நடைபெற உள்ளதாகவும், மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04329 228555 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


