News August 6, 2024

அரியலூர் அரசு பள்ளி மாணவர்களின் சாதனை 

image

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று வட்டார அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் மூன்று பிரிவில் நடைபெற்ற போட்டியில் செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகள் மாணவிகள் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் விளையாட்டுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளை பாராட்டி சான்றுதல் பரிசுகள் வழங்கினார்கள்

Similar News

News November 24, 2025

அரியலூர்: பசுமை சாம்பியன் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

image

சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கபட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்ப படிவத்தினை www.tnpcp.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

News November 24, 2025

அரியலூர்: ஒரே ஆண்டில் இவ்வளவு வழக்கா?

image

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தை திருமணத்தால் சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 2025-ம் ஆண்டு மட்டும் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ குறித்த 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

News November 24, 2025

அரியலூர்: மாநில சிறுபான்மையினர் குழு ஆய்வு கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், இன்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலதுறையின் சார்பில், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தலைமையில், சிறுபான்மையினர் சிறப்புக்குழு ஆய்வுகூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி முன்னிலை நடைப்பெற்றது. இதில் மாநில சிறுபான்மையின ஆணைய தலைவரிடம் வழங்கபட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளபட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நிகழ்வு நடைபெற்றது.

error: Content is protected !!