News March 20, 2024
அரியலூர்: அதிமுக வேட்பாளராக சந்திரகாசன் அறிவிப்பு

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிமுக கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் சந்திரகாசன் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
அரியலூர்: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

அரியலூர் மாவட்டம் வீரபோகம் நடுத்தெருவை சேர்ந்தவர் அனிதா. இவர் கல்லூரி படித்துவிட்டு, தற்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்காக படித்து வருகிறார். இந்நிலையில், அனிதாவின் அண்ணனான அருண் சம்பத்துக்கு பழக்கமான 2 பேர். ரூ.12 லட்சம் கொடுத்தால் அனிதாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, 2018 தேர்வெழுதிய அனிதாவும் 10 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து மீன்சுட்டி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
News November 22, 2025
அரியலூர்: சரக்கு வாகனம் மோதி விபத்து

அரியலூர் மாவட்டம், வீரசோழபுரம் பேருந்து நிலையம் அருகில், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், சென்ற சரக்கு வகான ஓட்டுனர், தூக்க கலக்கத்தில் இருந்ததால் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த இருசக்கர வாகன ஓட்டி மற்றும் சைக்கிளில் வந்த நபர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
News November 22, 2025
அரியலூர்: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

வெங்கனூரை சேர்ந்வர் கவியரசன்(23). இவர் மீது வெங்கனூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 26ம் தேதி வெங்கனூர் காவல் நிலையம் முன்பு, போலீசாரை தாக்கி கத்தியால் கொலை செய்ய முயன்றுள்ளார். அவர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைந்த நிலையில், போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரை பேரில் கலெக்டர் ரத்தினசாமி குண்டர் தடுப்பு சட்டத்தில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


