News September 8, 2024
அரியலூரில் 30 பேருக்கு விருது

அரியலூர் மாவட்ட கலை மன்றம் சார்பாக 30 சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் 6 பேருக்கு கலை இளமணி விருதும், 6 பேருக்கு கலை வளர்மணி விருதும், 6 பேருக்கு கலை வளர்மணி விருதும், 6 பேருக்கு கலை நன்மணி விருதும், 6 பேருக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கலை மன்ற உதவி இயக்குனரும், செயலாளருமான செந்தில்குமார், இதர அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Similar News
News April 30, 2025
மதுக்கடைகள் மூட உத்தரவு – ஆட்சியர் அறிவிப்பு

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, நாளை (மே.01) அரியலூர் மாவட்டத்திலுள்ள மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மதுக்கடைகள் மற்றும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் மதுபான கூடங்கள் மூடப்பட்டு விற்பனை நிறுத்தப்பட வேண்டும். விதியைமீறி இயங்கும் மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News April 29, 2025
அரியலூர்: பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் ஆலந்துறையார்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ளது, அருந்தவ நாயகி உடனாய ஆலந்துறையார் கோயில். இங்குள்ள மூலவர் ஆலந்துறையார், அருந்தவநாயகி ஆவர். சிவபெருமானை பிரிந்து சென்ற பார்வதி தேவி இங்கு தவம் செய்து மீண்டும் சிவபெருமானுடன் சேர்ந்தார். ஆகையால் இங்கு வழிபட்டால் பிரிந்த தம்பதியரும் சேருவர் என கூறுகின்றனர். மேலும் இங்கு வழிபட்டால் மாத்ருஹத்தி தோஷம், திருமணத் தடை போன்றவையும் நீங்கும் என்கின்றனர். இதை பகிரவும்
News April 29, 2025
அரியலூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளில் வருகிற மே.01ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். இதில் நிர்வாகம், பொதுநிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி, வரி செலுத்தல் ஆகியவை விவாதிக்கப்படும். மக்கள் பிரதிநிதிகள், மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.