News August 9, 2024

அரியலூரில் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் கைது

image

ஜெயங்கொண்டத்தில் பத்திரப் பதிவுக்கு ரூ.1500 லஞ்சம் வாங்கிய பத்திரப் பதிவு அலுவலர் பிரகாஷ் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரசாயனம் தடவிய பண நோட்டுகளை பெற்றபோது மறந்திருந்த லஞ்சஒழிப்பு துறை போலீசார் அலுவலக உதவியாளர் சக்திவேல், பதிவு அலுவலர் ஆகிய இருவரை கையும் களவுமாக பிடித்தனர்.பின்பு பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து போலீசார் புகார் மனுவை பெற்று விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News December 10, 2025

அரியலூர்: வாட்ஸ் அப் வழியாக புக்கிங்!

image

அரியலூர் மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News December 10, 2025

அரியலூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு?

image

அரியலூர் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. மேலும் <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 10, 2025

அரியலூர்: 69 பேர் மீது வழக்கு பதிவு

image

அரியலூர் மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் சாஸ்திரி உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் மது அருந்திய 41 பேர், மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டியதாக 14 பேர், சட்டவிரோதமாக மது விற்றதாக 7 பேர், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என அரியலூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

error: Content is protected !!