News April 4, 2025
அரியலூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி (Business Development Executive) பணிக்கான 20 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.25,000 வரையில் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் <
Similar News
News December 22, 2025
அரியலூரில் 496 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு அரியலூரில் நடைபெற்றது. மொத்தம் 1870 பேர் விண்ணப்பித்த நிலையில், 1374 பேர் தேர்வில் பங்கேற்றனர்; 496 பேர் எழுதவில்லை. தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிலைய மையத்தில் நடைபெற்ற தேர்வை காவல் துறை துணைத் தலைவர் ஆனிவிஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி பார்வையிட்டனர்.
News December 22, 2025
அரியலூர்: கல்வி உதவித்தொகை வேண்டுமா?

பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தில் 2025-26-ம் கல்வியாண்டில் பயன்பெற அரசு கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மாணவ-மாணவிகள் தங்களது கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் வருகிற 31-ம் தேதி ஆகும் என ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News December 22, 2025
அரியலூர்: திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

அரியலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் 24-ம் தேதி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டத்தைக் கொண்டு வந்த மத்திய அரசையும், அதிமுகவையும் கண்டித்து நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து அமைச்சர் சிவசங்கர், திமுக நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.


