News April 13, 2025

அரியலூரில் மாவட்டத்தின் வெப்பநிலை தகவல்

image

அரியலூர் மாவட்டத்தின் வெப்பநிலை அரியலூர் 42°c டிகிரி, செந்துறை 39°c டிகிரி, ஜெயங்கொண்டம் 41°c டிகிரி, உடையார்பாளையம் 39°c டிகிரி, ஆண்டிமடம் 39°c டிகிரி, ஆர் எஸ் மாத்தூர் 39°c டிகிரி என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  இந்நிலையில், வெயில் காலங்களில் அதிக தண்ணீர் குடிப்பது, நீர் ஆகாரம் குடிப்பது போன்றவை வெயில் காலங்களில் உடலுக்கு குளிர்ச்சி தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Similar News

News October 14, 2025

அரியலூர்: அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

image

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் மத்திய அரசு அறிவித்துள்ளபடி மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கிட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News October 14, 2025

அரியலூர் நகர் பகுதிகளில் பாதுகாப்பு பணி தீவிரம்

image

அரியலூர் நகர் கடைவீதியில் பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்து செல்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி அரியலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News October 14, 2025

அரியலூர்: காவல் துறை சார்பில் கண்காணிப்பு கோபுரம்

image

அரியலூர் நகர் கடைவீதி பகுதி பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் ஏராளமானூர் வருகை தந்து செல்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி அரியலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!