News August 8, 2024
அரியலூரில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
அரியலூர்: மணல் எடுத்தால் கடும் நடவடிக்கை

அரியலூர் மாவட்டம், திருமானூரில் மணல் கடத்தல் சம்பவம் நடைபெறுகிறதா என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருமானூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட ஒரு நபரின் மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News October 14, 2025
அரியலூர்: தீபாவளிக்கு பலகாரம் வாங்க போறீங்களா?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!
News October 14, 2025
அரியலூர் மாவட்டத்தில் 15 பேர் மீது வழக்கு

அரியலூர் மாவட்ட எஸ்பி அறிவுறுத்தலின் பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 15 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.