News May 10, 2024
அரியலூரில் மழைக்கு வாய்ப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 6, 2025
அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு

அரியலூர் மாவட்டத்தில் நேற்று மிதமான மழை பெய்தது. இதனை ஒட்டி அரியலூரில் 2 மி.மீ, திருமானூரில் 2 மி.மீ, ஜெயங்கொண்டத்தில் 8 மி.மீ, செந்துறையில் 2.4 மி.மீட்டரும், ஆண்டிமடத்தில் 5.4 மி.மீட்டரும், சித்தமல்லி டேமில் 4 மி.மீட்டரும், குருவாடியில் 2 மிமீட்டரும், தா.பழூரில் 3 மி.மீ மழை பெய்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் மொத்தமாக 28.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 6, 2025
அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருது பெற சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை டிச-18 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 6, 2025
அரியலூர் எஸ்பி தலைமையில் முக்கிய ஆலோசனை

அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் டிச.5 ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்பி விஸ்வேஷ் பா சாஸ்திரி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் போக்சோ வழக்குகள், எஸ்சி எஸ்டி வழக்குகள், மேலும் நிலுவையில் உள்ள கொடுங்குற்ற வழக்குகளை விரைவாக முடிப்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.


