News March 4, 2025
அரியலூரில் மனு அளித்த மறுநிமிடமே உதவிய ஆட்சியர்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியிடம் உடையார்பாளையம் வட்டம், தா.பழூர், சீனிவாசபுரத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்ற முதியவர் தனக்கு இரு காதுகளும் கேட்காது எனவும், தனக்கு தமிழக அரசு வழங்கும் இலவச காது கேட்கும் கருவியினை வழங்கி உதவுமாறு மனு அளித்தார். இதனையடுத்து மறுநிமிடமே ஆட்சியர் மாற்றுத்திறனாளி நல துறையினர் மூலம் முதியவருக்கு காது கேட்கும் கருவிகளை வழங்கினார்.
Similar News
News December 14, 2025
அரியலூர் மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

அரியலூர் மாவட்டத்தில், பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உரிய அனுமதி பெற்ற பிறகு அதனை பயன்படுத்த வேண்டும். மேலும் யாராவது அனுமதி பெறாமல் துப்பாக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது சட்டபடி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் சாஸ்திரி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளர்.
News December 14, 2025
அரியலூர்: தேசிய நீதிமன்றத்தில் 1758 வழக்குகள் தீர்வு

அரியலூர் மாவட்ட நீதிமன்றங்களில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் சார்பில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மலர் வாலண்டினா தலைமை தொடங்கி வைத்தார். மேலும் இதில் மொத்தம் 1,728 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
News December 14, 2025
அரியலூர்: ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


