News April 20, 2025
அரியலூரில் பயிற்சி முகாம்; கலெக்டர் அறிவிப்பு

அரியலூரில் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் 21 நாட்கள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் ஏப்.25 முதல் மே.25 வரை நடைபெறுகிறது. இதில், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதவர் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
அரியலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விவரங்கள்

பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை விரைந்து வழங்கிடும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் இன்று (செப்.16) தா.பழூர் ஒன்றியம் – வெண்மான் கொண்டான் திருப்பதி திருமண மண்டபம், செந்துறை ஒன்றியம் – இரும்புலிக்குறிச்சி தங்கவேலு பானுமதி திருமண மண்டபம் மற்றும் அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் முகாம் நடைபெற உள்ளது. SHARE NOW!
News September 16, 2025
அரியலூர் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

அரியலூர் என்ற பெயர், “அரி” (விஷ்ணு) மற்றும் “இல்” (இல்லம்) ஆகிய சொற்களின் சேர்க்கையால் உருவானது. இது விஷ்ணுவின் இருப்பிடம் அல்லது இல்லம் எனப் பொருள்படும். பின்னர் இது “அரியிலூர்” என்றும், அதிலிருந்து அரியலூர் எனவும் மருவியதாகக் கூறப்படுகிறது. அரியலூர் பகுதி வைணவ வழிபாட்டுத் தலங்கள் அதிகம் உள்ள இடமாக இருந்ததால், இப்பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது. இதனை உங்கள் நண்பர்களுக்கும் மறக்காம ஷேர் பண்ணுங்க!
News September 16, 2025
அரியலூர் கலெக்டர் அறிவிப்பு

அரியலூர், கே.எம்.எஸ் 2025-2026 ம் ஆண்டு குறுவை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக திருமழப்பாடி, ஏலாக்குறிச்சி, செங்கராயன்கட்டளை, வடுகபாளையம் கா.மாத்தூர், கண்டிராதீர்த்தம், குலமாணிக்கம், மஞ்சமேடு, இலந்தைக்கூடம் மற்றும் அழகியமணவாளன் ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.