News December 5, 2024

அரியலூரில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

அரியலூர் மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு இயங்கி வரும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் https://ariyalur.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினைபதிவிறக்கம் செய்து 18ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 25, 2025

அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. அவ்வகையில், நேற்று முதல் இன்று காலை வரை அரியலூரில் 19.4 மி.மீ, திருமானூரில் 9 மி.மீ, ஜெயங்கொண்டத்தில் 20 மி.மீ, செந்துறையில் 18.4 மி.மீ, ஆண்டிமடத்தில் 6 மி.மீ, தா.பழுரில் 3 மி.மீ மழை பெய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மாவட்டத்தின் மொத்த மழையளவு 95.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News November 25, 2025

அரியலூர்: குழந்தை திருமணம் – போக்சோவில் 88 வழக்குகள் பதிவு

image

அரியலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடம் இடங்களில் போக்சோ மற்றும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் 2025ஆம் ஆண்டு குழந்தை திருமணம் மற்றும் போக்சோவில் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

News November 25, 2025

அரியலூர்: ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் மாற்றாக பொருட்களை பயன்படுத்த பங்களிப்பு செய்த பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது. 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும். மேலும் தகவலுக்கு <>ariyalur.nic.in<<>> என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!