News April 9, 2025
அரியலூரில் சுட்டெரித்த வெயில்-பரிதவித்த மக்கள்

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவானது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News November 16, 2025
அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட அறிவிப்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (நவ.17) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 16, 2025
அரியலூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

அரியலூர் மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 16, 2025
அரியலூர்: விபத்தில் பெண் தலைமை காவலர்!

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் காவல் நிலைய பணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பெண் தலைமை காவலர் விபத்தில் காயம். பெரியதத்தூர் கிராமத்தில் இருந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மாடு குறுக்கிட்டு வந்து வாகனத்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். உடனடியாக அங்கிருந்து அவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


