News December 31, 2024
அரியலூரில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது குற்றம்

அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வாகனம் ஓட்டுவது குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொது மக்களுக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுவது, பொது சாலையில் சாகசம் செய்வது, போக்குவரத்து விதி மீறல் சட்டப்படி குற்றமாகும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
அரியலூர் மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு வாங்க் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.22) அவ்வப்போது மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க!
News November 22, 2025
அரியலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

அரியலூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News November 22, 2025
அரியலூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பான சிறப்பு உதவி மையம் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இம்மைங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அவரவர் வாக்கு செலுத்தும் மையங்களில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


