News August 25, 2024

அரவைக்காக 2,000 டன் நெல் மதுரைக்கு அனுப்பி வைப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதேபோல் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்கில் இருந்த நெல் மூட்டைகள் லாரிகள் தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து சரக்கு ரயிலில் 42 வேகன்களில் 2,000 டன் நெல் அரவைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Similar News

News November 22, 2025

தஞ்சாவூர்: மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே மேலமாஞ்சேரியைச் சேர்ந்த 83 வயதான லோகாம்பாள், தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவர் மரக்கிளையை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பியைப் பிடித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கபிஸ்தலம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 22, 2025

தஞ்சாவூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <>இங்கே கிளிக் <<>>செய்து, அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 22, 2025

தஞ்சாவூர் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்காளர் உதவி மையங்கள் இன்று (நவ.22) செயல்படுகின்றன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கீட்டு படிவத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கு இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை உதவி மையங்கள் செயல்படுமென மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!