News August 25, 2024
அரசு வேளாண் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

காரைக்காலில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் அரசு கல்லூரியில் வேளாண் இளங்கலை @ B.Sc.(Hons) Agriculture மற்றும் தோட்டக்கலை B.Sc. (Hons) Horticulture பட்டப்படிப்பிற்கு சுயநிதி பங்களிப்பு திட்டத்தின் கீழ் நேரடி சேர்க்கை கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் கட்டண விபரங்கள் இணையதளத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 1383 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, டிப்ளமோ
3. கடைசி தேதி : 02.12.2025
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,51,100
5. வயது வரம்பு: 18 – 40 (SC/ST – 45, OBC – 43)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 27, 2025
மத்திய நிதி அமைச்சரை சந்தித்த புதுவை சபாநாயகர்

புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்தார். பின் புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கு, விரைந்து அனுமதி அளித்து மத்திய அரசின் மானியத்தில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்குவதற்கு, இந்த நிதி ஆண்டில் முதற்கட்ட நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் அளித்தார்.
News November 27, 2025
புதுவை: ரூ.650 கோடியில் சாலை மேம்பாலம் பணிகள்!

புதுவையில் ரூ.650 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம், சாலை விரிவாக்கத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில், இந்திராகாந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை இடையே மேம்பாலம், இந்திராகாந்தி சிலையிலிருந்து அரியாங்குப்பம் வரை 2.6 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் மற்றும் அரியாங்குப்பத்தில் இருந்து முள்ளோடை வரை 13.4 கி.மீ. வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.


