News August 26, 2024
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி; தம்பதி கைது

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கிழக்கு மலம்பேட்டை தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ராஜா(46). இவர், இவரது மனைவி பத்மா & செங்கோட்டையை சேர்ந்த சரவணன் ஆகியோர் சேர்ந்து அந்த பகுதியை சேர்ந்த இரு தரப்பினரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக தனித்தனி புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாரிமுத்து ராஜா, பத்மாவை நேற்று(ஆக.,25) போலீசார் கைது செய்தனர். சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
தென்காசி வழக்கறிஞர் கொலையில் 2 பேரிடம் விசாரணை

தென்காசியில் நேற்று அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில், குற்றவாளியாக கருதப்படும் நபரின் மனைவி மற்றும் உறவினரை முதற்கட்டமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கேரளாவில் சென்று தலைமறைவான கொலையாளியை தேடி வருகின்றனர்.
News December 4, 2025
தென்காசி: TNHB -ன் மாடி வீடு வேண்டுமா? APPLY!

தென்காசி மக்களே TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <
News December 4, 2025
தென்காசி: டிகிரி போதும்.. ரூ.85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

தென்காசி மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <


