News June 26, 2024
அரசு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்காக 14 விடுதிகள் உள்ளன. இதில்,சேர விரும்பும் பள்ளி மாணவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை 16.7.2024 க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 14, 2025
செங்கல்பட்டு: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <
News December 14, 2025
செங்கல்பட்டு: ஆந்திராவில் இருந்து 50 பசுமாடுகள் கடத்தல்!

செங்கல்பட்டு: ஆந்திராவில் இருந்து பொள்ளாச்சிக்கு, கண்டெய்னர் லாரியில் பசுமாடுகள் கடத்தப்படுவதாக ப்ளூ கிராஸ் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கன்டெய்னர் லாரியை பரனூர் சுங்கச்சாவடியில் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து போலீசார் வந்து விசாரித்ததில், கண்டெய்னரில் 50 பசு மாடுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை லாரியோடு பறிமுதல் செய்த போலீசார், மாடுகளை வாங்கிய ஸ்டான்லியிடம் விசாரித்து வருகின்றனர்.
News December 14, 2025
செங்கல்பட்டு: AC வெடித்து தீப்பிடித்த வீடு!

செங்கல்பட்டு: கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூரைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (38). இவர் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, படுக்கை அறையில் இருந்த ஏ.சி. எந்திரம் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக ஜெகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே ஓடி வந்துவிட்டனர். இதில், வீடு தீப்பிடித்த நிலையில், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.


