News February 18, 2025
அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கைதி

கேரளாவை சேர்ந்தவர் பாபு அகமது ஷேக் (55), கடந்த 2021ஆம் ஆண்டு காட்பாடி அருகே ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி உடல் நலக்குறைவால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து அவர், நேற்று (பிப்ரவரி 17) பாபு அகமது ஷேக் தப்பி சென்றார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 13, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News September 12, 2025
வேலூர் சிறகு விரி உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

வேலூர் மாவட்டம் பிள்ளையார் குப்பம் பகுதியில் ஜி.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் நாளை (செப்டம்பர்-13) பகல் 12.30 மணி அளவில் மாணவர்களுக்கான சிறகு விரி உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
வேலூர்: பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 2A நேர்காணல் அல்லாத தேர்வில் தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உதவியாளர்களின் பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (செப்டம்பர்-12) வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்தையன் ஆகியோர் உடனிருந்தனர்.