News September 13, 2024
அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தல்

அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மற்றும் மகளிர் நலன் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சையில் சிறப்பு கவனம் செலுத்த மருத்துவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட அளவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News September 18, 2025
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தலைமையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டு வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலர், பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
News September 18, 2025
தாத்தா இரட்டைமலை சீனிவாசன்; திருவள்ளூர் எம்.பி பதிவு

திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இரட்டைமலை சீனிவாசன், ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காக தனி அமைப்பை நிறுவி தீண்டாமை ஒழிப்பு, கோயில் நுழைவு, நில உரிமை, கல்விக்கு நிதி ஒதுக்கீடு போன்றவற்றுக்காக போராடியவர். தமிழக மக்களால் தாத்தா என அன்போடு அழைக்கப்பட்ட இரட்டைமலை சீனிவாசன் பற்றி தனது பதிவு மூலம் நினைவுகூர்ந்தார்.