News April 16, 2025
அரசு மதுபானக்கடை மதுபாட்டியில் இறந்த நிலையில் பல்லி

புத்தூரில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் மதுபிரியர் ஒருவர் மது வாங்கிய போது, பாட்டிலின் உள்ளே பல்லி இறந்து கிடந்து உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதுகுறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டபோது நிறுவனத்தின் குறைபாடு எங்களுக்கு சம்மந்தமில்லை எனக் பதில் கூறியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுப்பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News December 30, 2025
மயிலாடுதுறை காவல் துறை சார்பில் விழிப்புணர்வு!

சமூகநீதி மற்றும் மனித உரிமைகளை வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் சார்பில் வெகுஜன விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் மணல்மேடு பட்டவர்த்தியில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், சமூக நீதிக்கான விளக்கம், மனித உரிமையின் வகைகள், மனித உரிமை மீறல் மற்றும் அதற்கான தண்டனைகள், குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
News December 30, 2025
மயிலாடுதுறை: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்

மயிலாடுதுறை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.
News December 30, 2025
மயிலாடுதுறை: பசு மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் பால் விலையை லிட்டருக்கு ரூபாய் 15 உயர்த்தி வழங்க கூறி நேற்று பசு மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


