News April 24, 2025
அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 25, 2025
திருச்சி: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பைக்

துவரங்குறிச்சி அடுத்த இச்சடிபட்டியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வலசுப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது டூவீலர் திடீரென தீப்பிடித்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 25, 2025
திருச்சி: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு!

திருச்சி மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News November 25, 2025
திருச்சியில் கோர விபத்து

திருச்சி வரகனேரியை சேர்ந்த ஷேக் அப்துல்லா, நிகேஷ் ஆகியோர் டூவீலரில் நேற்று தென்னூர் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் டூவீலரில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஷேக் அப்துல்லா பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய காட்டூரைச் சேர்ந்த முகமது ஆசிக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


