News April 24, 2025
அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 20, 2025
கடலூர்: 10th போதும் அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 1383 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, டிப்ளமோ, துறை சார்ந்த டிகிரி
3. கடைசி தேதி : 02.12.2025
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,51,100
5. வயது வரம்பு: 18 – 40 (SC/ST – 45, OBC – 43)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 20, 2025
கடலூர் மாவட்டத்தில் வேகமாக நிரம்பும் ஏரிகள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 228 ஏரிகள் அமைந்துள்ளன. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 54 ஏரிகள் 76% முதல் 99% வரை நிரம்பியுள்ளன. அதுபோல 83 ஏரிகள் 51% முதல் 75 சதவீதமும், 65 ஏரிகள் 26 முதல் 50% நிரம்பியுள்ளன. வெறும் 26 ஏரிகளில் மட்டுமே 25 சதவீதத்திற்கும் குறைவாக தண்ணீர் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 20, 2025
கடலூர்: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

கடலூர் மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


