News April 20, 2025
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
Similar News
News December 10, 2025
ராமநாதபுரம்: சிறுமி கர்ப்பம்., இளைஞர் மீது போக்சோ!

தொண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், ஆரியமணி (20) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமிக்கு உடல் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு சென்றுள்ளனர், அங்கு அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திருவாடனை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். திருவாடனை போலீஸார் ஆரியமணி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
News December 10, 2025
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச 10) ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி, குமரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனை எலோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News December 10, 2025
மண்டபம் வட கடல் விசைப் படகுகள் தொழிலுக்கு செல்ல தடை

வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 60 கிமீ வரை நாளை (டிச.10) வீசக்கூடும். இதனால் மண்டபம் வடகடல் விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு நாளை (டிச.10) வழங்கப்பட மாட்டாது. வட, தென் கடல் நாட்டுப் படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மண்டபம்
மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


