News April 19, 2025
அரசு போக்குவரத்துறையில் வேலை.. கடைசி வாய்ப்பு

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News December 2, 2025
கிருஷ்ணகிரி: கல்குவாரியில் கஞ்சா செடி…விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கலர்பதி என்ற கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு கல் குவாரியில் சுமார் 10 அடி உயரம் கஞ்சா செடியை அடையாளம் தெரியாத நபர்கள் வளர்த்துள்ளனர். இதனை அறிந்த மத்தூர் காவல் ஆய்வாளர் பத்மா, நேற்று (டிச.01) கல் குவாரியை சோதனை செய்தபோது கஞ்சா செடி இருந்தது, அறிந்து அதனை பிடுங்கி காவல் நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர். பின் குவாரி உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர்.
News December 2, 2025
கிருஷ்ணகிரி: தொழிற்சாலையில் விபத்து.. ஒருவர் பலி

கிளமங்கலம் அடுத்த கூலிசந்திரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில் நேற்று (நவ.01) மதியம் 3 மணி அளவில் ஊழியர் ஒருவர் லிஃப்ட் இயந்திரத்தை சுத்தம் செய்து விட்டு தண்ணீர் குடிப்பதற்காக கீழே இறங்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் இன் அடியில் தலை மாட்டிக் கொண்டு வர முடியாமல் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News December 2, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் (டிச.02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


