News April 21, 2025
அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை : இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இங்கு<
Similar News
News November 27, 2025
திருவாரூர்: வாய் பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

முத்துப்பேட்டையை சேர்ந்த 18 வயது நிரம்பிய வாய் பேச முடியாத மற்றும் மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 23ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தந்தை யார் என்று தெரியாத நிலையில் தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அகல்யா முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுகுணா மர்ம நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றார்.
News November 27, 2025
திருவாரூர்: மழையால் இடிந்து விழுந்த வீட்டு சுவர்!

திருத்துறைப்பூண்டி, குன்னூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையில் செல்லதுரை என்பவர் வீடு ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் உள்ளே இருந்த பார்வையற்ற ஒரு நபர் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இதையடுத்து அவர்களுக்கு தமிழக அரசு வீடு கட்டித் தர வேண்டும் மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் .
News November 27, 2025
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் பசுமை முதன்மையாளர்கள் விருது 2024 -க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் திறந்து விளங்குகின்ற 100 நபர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட இருப்பதாகவும், அதனை www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


