News April 17, 2024
அரசு பேருந்து மோதி பலியான சாலை பணியாளர்
திருமங்கலம் அருகே வாகைக்குளத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(60). இவர் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பகுதியில் நேற்று இரவு சாலை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாமிநாதன் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சாமிநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 20, 2024
மதுரையில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மதுரையிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பார்சல் சர்வீஸ் லாரி ஒன்று வேகமாக சென்றது. போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. வாடிப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் மகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
News November 20, 2024
உசிலம்பட்டி நகராட்சியில் 1200 கிலோ நெகிழி பறிமுதல்
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் கடந்த ஒரு வார காலமாக உசிலம்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் இன்று (நவ.20) வரை சுமார் 1 லட்சம் வரை அபராதமும், 1200 கிலோ நெகிழி பைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.
News November 20, 2024
சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற தடை – ஐகோர்ட்
மதுரை சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக சின்ன உடைப்பு கிராம மக்கள் நீண்ட நாட்களாக போராடி வந்தநிலையில், அவர்ளை வெளியேற்ற வேண்டாம், நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி நோட்டீஸ் வழங்க வேண்டும், நோட்டீஸை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றலாம், அதுவரை நடவடிக்கை கூடாது என தெரிவித்து ஆட்சியர் பதில் தர உத்தரவு.