News February 16, 2025

அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

image

வாலாஜாபாத், ராஜவீதி பகுதியில் வசித்து வருபவர் பழனி. மர வியாபாரம் செய்து வரும் இவர், தனது உதவியாளர் வரதன் உடன் நேற்று (பிப்.15) வாலாஜாபாத் – தாம்பரம் சாலை சேர்க்காடு பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பைக்கில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது தாம்பரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கி சென்ற அரசு பேருந்து அவர்கள் மீது மோதியது. இதில், வரதன் உயிரிழந்தார். பழனி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News

News October 31, 2025

பனையூர் தவெக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (அக். 30) நள்ளிரவு சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது. மேலும், மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

News October 31, 2025

செங்கல்பட்டு: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 31, 2025

செங்கல்பட்டு: பைக் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து

image

மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மகேந்திரா சிட்டியில் இருந்து மதுராந்தகம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். இருங்குன்றம்பள்ளி அருகே வந்த போது பின்னால் வந்த அரசு பேருந்து கார்த்திக் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தப்பியோடிய ஓட்டுநர் நடத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!