News April 29, 2025

அரசு பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

image

கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது கும்பகோணத்திலிருந்து அய்யாவாடி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த நபர் யார் – எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News July 11, 2025

BREAKING: தஞ்சை வருகை தரும் பிரதமர் மோடி

image

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ளார். அதற்கு முன்னதாக அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. SHARE NOW

News July 11, 2025

கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: ராமதாஸ்

image

தஞ்சை, திருவாரூா் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் தனியாா் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, பாமக மாவட்டச் செயலா் ம.க.ஸ்டாலின் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தில் 2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் எனது விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

News July 11, 2025

தஞ்சையில் தயார் நிலையில் 155 தேர்வு மையங்கள் -ஆட்சியர்

image

தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-4 எழுத்துத் தோ்வு நாளை காலை நடைபெற உள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 43 ஆயிரத்து 517 தோ்வா்கள் பங்கேற்கவுள்ளனா். இதற்காக அனைத்து வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் 155 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!