News April 29, 2025
அரசு பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது கும்பகோணத்திலிருந்து அய்யாவாடி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த நபர் யார் – எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (செப்.17) இரவு 10 மணி முதல் இன்று(செப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காலவர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
தஞ்சை மாவட்ட வளர்ச்சி பணி ஆய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் இன்று (செப்.17) நடைபெற்றது. இதில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம். அரவிந்த் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் முன்னிலையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஆலோசனை மேற்க்கொள்ளப்பட்டது.
News September 17, 2025
தஞ்சை: ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <