News April 21, 2025
அரசு பஸ் மோதி பட்டதாரி வாலிபர் பலி

திண்டிவனம், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கோபால்(23). இவர், திண்டிவனத்தில் உள்ள பேக்கரியில் பகுதி நேர பணி செய்து வந்தார். நேற்று நான்கு முனை சந்திப்பில் பைக்கில் சென்றபோது, விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் பஸ்சின் அடியில் பைக்குடன் சிக்கிய கோபால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திண்டிவனம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 10, 2026
விழுப்புரம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 10, 2026
விழுப்புரம்: G Pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 10, 2026
விழுப்புரம்: மதுக்காக உயிரை விட்ட முதியவர்!

விழுப்புரம்: பாணாம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் ஏ.சேகா் (64). மதுப்பழக்கம் உடைய இவா் தினமும் வீட்டுக்கு மது அருந்தி வந்தாராம். இதை சேகரின் மனைவி பூங்காவனம், மகன் சபரிநாதன் ஆகியோா் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சேகா் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.


