News April 22, 2025

அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது

image

பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை தருமபுரி 4 ரோட்டில் பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை பேருந்து நிலையத்திற்கு கொண்டு செல்ல நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 போதை ஆசாமிகள் ” கிருஷ்ணகிரிக்கு செல்ல வேண்டும், உடனே பஸ்சை திருப்பு” என அவரிடம் வம்பு செய்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டவுன் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

Similar News

News November 28, 2025

தருமபுரி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாகனம் ஓட்டும்போது கைபேசியை பயன்படுத்தக்கூடாது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகை ஒன்றை இன்று (நவ.27) வெளியிட்டுள்ளது. வாகனம் ஓட்டும் பொழுது கைபேசியை பயன்படுத்தும் போது ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் இவ்வாறு விழிப்புணர்வு பேனர் ஒன்றை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் கவனத்துடன் இருக்கவும் எச்சரித்துள்ளது.

News November 27, 2025

தருமபுரி எழுத்தாளர்களுக்கு நிதியுதவி!

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் சார்பில் ஆண்டும் தோறும் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்டு, தலா ரூ.1,00,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திலும் பெற்று கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் (இன்று.27) அறிவித்தார்.

News November 27, 2025

தருமபுரி: தொழில் தொடங்க கடனுதவி – ஆட்சியர் அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் தொழில் முனைவோர்களாக விரும்பும் மகளிர் மற்றும் திருநங்கை தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும். கடன் தொகை ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் வழங்கப்படும் என இன்று (நவ.27) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை www.msmeonline.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04342-230892, 8925533941, 8925533942 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். என ஆட்சியர் சதிஷ் அறிவித்தார்.

error: Content is protected !!