News April 15, 2025
அரசு பஸ்களில் கியூ ஆர்கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் கியூ ஆர்கோடு மூலம் ஸ்கேன் செய்து டிக்கெட் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 70% அரசு பஸ்களில் இது நடைமுறைக்கு வந்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் டவுன் பஸ்கள்,புறநகர் பஸ்களில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் குமரி மாவட்டத்திலும் இது அமலுக்கு வந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 4, 2025
குமரி: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக வீடுகள் வழங்கப்படும். இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <
News December 4, 2025
குமரி: 2,000 லிட்டர் மண்ணெண்ணய் கடத்தல்

நேற்று முன்தினம் (டிச.2) இரவில் கொல்லங்கோடு போலீசார் நீரோடி சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 55 கேன்களில் 2,000 லிட்டர் மானிய விலையில் மீனவர்களுக்கு விற்கப்படும் மண்ணெண்ணய் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து காரையும் பறிமுதல் செய்தனர். கேரளாவுக்கு மண்ணெண்ணய் கடத்த முயன்ற கலிங்கராஜபுரம் டிரைவர் லாலுவை (31) கைது செய்தனர்.
News December 4, 2025
குமரி: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு குமரி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.


